Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

அமாவாசையின் பூரணை நிலவு

உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.

அப்படி திருக்கடவூரில் கோயில் கொண்டு விளங்கும் அன்னையைத் தரிசிக்க அவள்
ஆலயத்தில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதுவும் பெண்கள் அதிகம் வரும் அவ்வழகிய ஆலயத்தில் பட்டர் எப்போதும் அம்மனையே வழிபட்டு அவள் பாதரவிந்தங்களைப் பணிந்து பாடிப்பரவி தன்னிலை மறந்து இருப்பார். ஆக இச்சமயம் கண்ணில் தெரியும் பெண்களை எல்லாம் தாயாக வடிவாம்பிகையாக அபிராமியாக துதிசெய்வார். பெண்கள் பயந்து பட்டருக்கு பைத்தியம் எனக் கூறியவாறு ஒடி
விடுவார்கள்.

அப்படி ஓரு நாளில் நி்றைந்த அமாவாசையில் அன்னையை வழிபாடாற்ற மன்னன் பரிவாரங்களுடன் வந்தான். அம்பிகையை தரிசனம் செய்த பின் ஆலயத்தை வலம் வந்த போது அபி்ராமி்ப்பட்டர் ஓரி்டத்தில் அமர்ந்து அன்னையின் திவ்விய தரிசனத்தி்ல் தன்னிலை மறந்து திளைத்திருந்தார். சரபோஜி மன்னனையும் மற்றவர்களையும் கவனி்க்கவில்லை. அவரைப்பார்த்து மன்னவன் "என்னை
மதியாமல் இருக்கும் இவன் யார்" ஏன கேட்டார். அதற்கு "அம்பிகை பக்தன் எப்போதும் அம்பிகையையே நினைத்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பவர். பெண்களை அம்பிகையாக நி்னைத்துக் கொண்டு இருக்கும் புரோகிதர் என்று மந்திரி கூறினார். உடனே மன்னன் "பட்டரே இன்று என்ன திதி கூறும்" என்றார். கண்ணை மூடிக்கொண்டே பட்டரும் "பூரணை இன்று முழுமதி தெரியும்" என்று

சொல்லி விட்டார். அவருக்கு அதிர்ச்சி "இன்று பிதுர்களுக்காக அமாவாசை திதி, மோட்ச பூஜையில் கலந்து வழிபட வந்தேன். இவர் பூரணை எண்கிறாரே?" மீண்டும் அதட்டி கேட்கிறார்."இன்று முழுநிலவு வருமா?", "வரும்" என்று அம்பிகையின் பேரொளியில் இருந்ததனால் திரும்பவும் அப்படியெ கூறினார். மன்னனும் கோபத்தில் விலத்தி அவ்விடம் விட்டு அகன்று காவலர்களே என்னை
மதியாமல் தொழிலையும் மதியாமல் திதியை தவறாக கூறிய பட்டரை அரிதண்டம் ஏற்றுங்கள். மாலை மங்கும் வேளை பூரணைநிலவு வானில் தோன்றாவிடில் தீக்குழிக்குள் இறக்குங்கள். இப்படி அவன் கட்டளை இட்டுச்சென்றான்.மன்னன் அவ்விடத்தை விட்டு அகன்றதும், அவரை ஏனைய புரோகிதர் எழுப்பி பட்டரே இன்று என்ன காரியம் செய்து விட்டீர் எழுந்திரும்.

அவர் விழிப்பு நிலை வந்து எழுந்து உட்காந்தார். ஏனையா எனம்பிகையின் ஒளி அழகைப் பார்க்க விடாது தடுத்தீர்" என்றார். "இங்கு யார் வந்தார்கள் எனத்தெரியுமா யார் வருவார்கள் அடியார்கள் அபிராமி அம்சமாகிய தாய்தெய்வங்கள் எல்லோரையும்  சாஸ்டாங்கமாக வணங்கினேன். நீர் ஒருவரை வணங்கவில்லை மதிக்கவும் இல்லை,யாரது கூறும், தெரியாது.பட்டரும் மற்ற புரோகிதரைப் பார்த்து நான் நிஸ்டையில் இருந்தேன், நீர் பூஜையில் இருந்தீர். அப்போது மன்னன் வந்திருந்தார் கண்ணை மூடிக்கொண்டு நீரும் இன்று அமாவாசைக்கு பதில் பூரணை என்று கூறி விட்டீர். புரோகிதரும் இப்படிச்சொல்லியதும் அதன்பின்பே விழிநிலைக்கு வந்த பட்டர் அம்மா உனையே நினைந்து அறியாமல் மன்னர் கேட்டதற்கு பூரணை என்று கூறிவிட்டேனே. இப்பொழுது என்செய்வேன். எனஅரற்றினார். இது குற்றமல்ல இருள் தெரியாது ஒளி தெரியும் எனக்கூறியுள்ளிர். அந்திமாலை இருள் சூழாது வானில் நிலவு தோன்றாவிடில் அரிதண்டம் ஏற்றி உன்னை நெருப்புக்குழியில் தள்ள மன்னன் கட்டளை இட்டுச் சென்று விட்டார். அன்னைதான் காப்பாற்ற வேண்டும். இப்படிக்கூறிச் சென்றார். பட்டருக்கு என்ன செய்வது என்று விழித்து அம்பிகையையிடம் சரணடைந்தார். அம்மா உன் கருணை புரியும் ஒளியை எனக்கு காட்டு என்று புல்ம்பி கண்ணீர் மல்க நின்றார்
 
அந்திமாலைப்பொழுது காவலர்கள் அவரை கட்டிக்கொண்டு அரிதண்டத்தில் ஏற்றிவிட்டனர். அபிராமி பட்டரின் பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த அவளது திருவிளையாடலின் முதலும் முடிவும் அற்ற நிலை புரியாது அபிராமி அந்தாதி பாடத்தொடங்கினார். பட்டர். வாழ்க்கையில் துன்பம் என்பதை அனுபவித்து தெரியாது சகதியில் விழுந்தோமே, என்று தெளிந்து நீரில் குளித்து இறைவனை வணங்கி பக்தியில் திளைத்து பேரின்பத்தை பெற்றுய்வது ஒருவகை. ஆனால் எப்போதும் வேண்டாமே இந்த துன்பம் என்று முப்போதும் இறைவனையே நினைந்து பேரின்பம் அடைய முயற்சிப்பது இன்னொருவகை. இந்த அபிராமிபட்டரும் வாழ்வை அம்பிகையைத்தரிசிப்பதற்கே எனவாழ்ந்து கொண்டு இருந்தவர். அப்படிப் பட்டவரை திதி கேட்டு மன்னனை கோபமடையச்  செய்து நூறு கயிறுகள் இணைத்து கட்டப்பட்ட அரிதண்டத்தில் பட்டரை ஏற்றி கீழே எரிக்கும் தீக்குழியை அமைக்க வைத்தார். நீ பாடு அந்தாதி பாடுவாயாகில் உன்னை அண்டாது தீ என அம்பிகையின் எழிலை அருளை உலகுக்கு உணர்த்திட அபிராமி செய்த அருள் என்றோ

கண்களை மூடிக்கொண்டே அபிராமியின் எழில் அழகை ரமிக்கச்செய்யும் வசீகரத்தோற்றத்தை மனக்கண்ணில் பதித்தவாறு பாடிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயீறுகள் அறுக்கப் பட்டுக்கொண்டு இருந்தன. அதக வெம்மையையும் [சூடு] பொருட்படுத்தாது அவர் பாடிக் கொண்டு அபிராமியின் மீது நம்பிக்கை எனும் ஒளியை இழக்காது மோனநிலையில் இருந்தார்.
எழுபத்தெட்டாவது பாடலை பாடிமுடிக்கும் போது அன்னையவள் தன்காதணியைக் கழட்டி வானில் வீசி எறிந்தார். அப்போது வானில் முழுவட்ட நிலவாக காதணி ஒளி வீசியது. மன்னன முதல் மக்கள் அனைவரும் அவ்வரிய காட்சி கண்டு அதிசயித்தனர். பட்டரின் தெய்வபக்தி கண்டு மெய்சிலிர்த்தனர். மன்னன் சரபோஜி இருக்கை விட்டு எழுந்து வந்து அவரை வணங்கி அரிதண்டத்தில் இருந்து இறக்கி அவரை மாலை மரியாதைகள் செய்தார். அபிராமிப்பட்டர் எனும் பட்டத்தையும் வழங்கினார். பட்டரும் மீதி  இருபத்திரெண்டு பாடல்களையும் பாடிமுடித்தார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வரும் சொல் அடுத்த பாடலின் துவக்கமாக இருப்பதும் முடிவும் முதலும் அற்ற அன்னையின் அபிராமி அந்தாதிப் பாடல்களாக இன்றுவரையிலும் பாடப்பெறுகின்றன. அன்னையின் அன்பும் அவள்மீது மாறாப்பக்தியும் நம்பிக்கையும் கொண்டு விளங்கிய பட்டரை மன்னன் கெளர்வித்து பலபரிசுகளும் வாழ்நாள் வரை நெல்லும் மானியங்களும் கொடுத்து என்றும் இறைபக்தியில் திகழ்ந்திடச் செய்தார். தை அமாவாசை நாளில் அபிராமி அந்தாதி நூறு பாடல்களும் ஆலயங்களில் இன்றும் பாடப்பட்டு வருவது மரபாகும்.

அடுத்து இன்னொரு விடயம் இந்த தை அமாவாசையச் சிரார்த்த திதி என்று பிதுர்க்கடன் செய்வர். விரதமனுஸ்டித்து தர்ப்பணம் செய்கின்றனரமனிதர்க:ளுக்கு மூன்று கடன்கள், அவை தேவர் கடன், முனிவர் கடன், பிதுர் கடன்  என வகுக்கப்பட்டுள்ளது இறைவனை வழிப்டுவது. தேவர்கடன் தேவார திருவாசக்ங்கள் பாடுவது முனிவர்கடன்,இறந்தவர்க்கு திதி கொடுப்பது பிதுர் கடன்.இப்படி மூன்று
கடன்களையும் செய்து வாழ்வில் கடன்கள் இன்றி நிறைவடையச் செய்யலாம். ஆண்டவனைவழிபடுவதும், தேவாரங்களைப் பாடுவதுவும் கடமைகளாச்செய்தாகிவிட்டது என்று இல்லாது இறந்த ஆத்மாக்களை நினைவு கூறுவதும் எமது கடமையாகும். காம்ய சிரார்த்தமாக மகோதயம் என்றுஅழைக்கப் படும் புண்ணிய நாளாக தை அமாவாசை கருதப்படுவதால் இந்நாளில் சிரார்த்தம் கைக்கொள்வது விசேசமாகும்..எமது இந்துக்கள் இல்லறக்கிரியைகளிலும் ஆலயக்கிரியைகளிலும் சரி அக்னி வழிபாடு முதன்மை பெறுகிறது. இவ்வக்கினி வழிபாட்டின் இறுதியில் 'ஜயாதி ஹோமம் எனப்படும் ஒரு ஆகுதி வழிபாடு இடம் பெறும். இது பிதுருக்களை வேண்டி வழிபடுதலாகும். அதற்காக கூறும் மந்திரத்தினால் மூவகையான பிதிருக்களும் திருப்தி செய்யப்படுகின்றனர் அந்த மூவகை பிதிருக்கள் தேவபிதிருக்கள், விசேசபிதிருக்கள், பிரேதப்பிதிருக்கள் என்றழைக்கப்படுகின்றனர். தேவபிதிருக்களாக கவ்யவாகனர், ஆனலர், சோமர், யமர் அரியம்ணர், அக்னிவாஸ்த்தர்,

பர்ஸிதர்,ஆஜ்யபர்,சோமபர்,என்போர் குறிப்பிடப்படுகின்றனர். விசேசபிதுருக்களாக ஈசர், சதாசிவர், சாந்தர் என்போர் குறிப்பிடப்படுகின்றனர், பிரேதபிதிருக்களாக பிதா, பிதாவின் பிதா, பிதாவின் பேரன், பிதாவின் தாய்,பிதாவின், பிதாவினுடைய தாய் என்ற ஒழுங்கில் பிதாவின் மூதாதையர்கள் மூவரும் மாதாவின் மூதாதையர்களும் நினைவு கூறப்படுகின்றனர். ஜாயாதி ஹோமத்தில் கூறப்படும் மந்திரத்தின் பொருள் உயிருடன் உள்ள பிதிருக்களும்,பிதாமகர்களும், பரலோகம் சென்ற பிதிர்களும் பிதாமகர்களும்,ஏழுதலைமுறைக்கு மேலானவர்களும், கீழானவர்களுமான எல்லாப் பிதிர்களும் என்னை இரட்சிக்க வேண்டும் என்று இம்மந்திரம் முடிய நீரைத் தொடச்சொல்லி கட்டளை இடுவார்கள். சுத்தி செய்ய நீரைத்தொடுவது உண்டு. ஆகவே ஆலயஙகளில் நடைபெறும் அனைத்து கிரியைகளின் துவக்கத்தில் புண்ணியாக வாசனத்தில் பிதிருக்கள் நாம் நன்மையாக வாழ அருள்புரிய வேண்டும் என்ற பிரார்த்தனை கூறப்படுகிறது. அதாவது இனிமையானதையே நான் மனத்தால் எண்ணும்படியும் இனிமையானதையே செய்யும் படியும், இனிமையானதையே பேசும்படியும், நல்லனவற்றையே தேவர்களுக்கும்,மனிதர்களுக்கும், செய்யும் படியும் தேவர்கள் அருளட்டும். பிதிருக்கள் ஆமோதிக்கட்டும். இவ்வாறு அருளாசியை வேண்ட மாசிமாத எட்டாம் திகதி அன்று நாம் சிவசக்தியை வணங்கி அருள் பெறுவோம்.

comments powered by Disqus