Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.

எமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது.

Read more...

மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்

உலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.

Read more...

'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' - ஆவணப்படம்

யுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய நிலையையும், எதிர்கொள்ளும் சவால்கள், இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் சொல்கிறார்கள். Narrative style இல் கதை சொல்லப்படவில்லை. ரிப்பீட் காட்சிகள் இல்லை. சற்றும் சலிப்பில்லாத ஆவணப் படம். நன்றி Gnanadas Kasinathar Surenthirakumar Kanagalingam Thanges Paramsothy

உண்மையில் இது புங்குடுதீவின் கதை மட்டுமல்ல. கைவிடப்பட்ட நிலங்களின் கதை.

இன்னும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்காக எதிர்பார்த்திருப்போர் நம்மிடையே ஏராளமானோர். அவை பற்றி அவ்வப்போதாவது பேசிக் கொள்கிறோம்.

ஆனால் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டு எங்களால் கவனிக்காமல் விடப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஒருவகையில் நாம் அனைவரும் மௌனமாகவே இருக்கிறோம். எம்மளவில் அதற்கான காரணங்களை முன்வைக்கலாம். நாமே நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். அதற்கப்பால் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதாக இருந்தால், நம் நிலங்களை மீளக்கட்டமைப்பதுடன் இன்றும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு நிர்க்கதியாயிருக்கும் நம்மவருக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

மீளக்கட்டமைத்தல் என்பது கோவில்கட்டிக் கும்பாபிஷேகம் நடாத்துவது, மூன்று நேரமும் மணியடிப்பது, குழாய் ஸ்பீக்கர் கட்டித் திருவிழா கொண்டாடுவது தவிர வேறு பல காரியங்களும் இருப்பதாக ஆர்வலர்கள் சொல்லக் கேள்வி.

இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, கைவிடப்பட்ட நம் நிலங்கள் தொடர்பில் எங்களை நாங்களே மானசீகமாகப் பார்த்துக் கொள்ளலாம். படத்தைப் பார்க்கும்போது 'கோவிலெல்லாம் புதுசாக் கட்டி இருக்கிறாங்கள் ஒரு கல்யாண மண்டபமும் கட்டினா நல்லா இருக்குமே' என்கிற அதி ஆக்கபூர்வமான சிந்தனை தவிர்த்து வேறேதும் தோன்றினால், இந்தப் படம் தனக்கான சரியான பார்வையாளனைச் சந்திக்கிறது எனலாம்.

நன்றி : ஜீ உமாஜி

இன்று கூகுளில் இசைப்பது உலகப்புகழ்பெற்ற செவ்விசை இயற்றுநர் "லுடுவிக் ஃவான் பேத்தோவன்"

பிரபல ஜேர்மனிய இசையமைப்பாளரான லுடுவிக் ஃவான் பேத்தோவன் அவரின் 245வது நினைவை இன்று கொண்டாடுகிறது கூகுள்.

Read more...

தீபன்

தீபன், திரைப்படம் குறித்த ஒரு சிறு குறிப்பு. இத்திரைப்படம் குறித்த பல்வேறு கருத்துக்கள் இணைய உரையாடல்களில் ஏலவே பகிரப்பட்டுள்ளன. அத் திரைப்படம் குறித்த மற்றுமொரு பார்வை..

Read more...

உலகின் பெரிய இந்துக் கோயிலுக்கு நிதியுதவி வழங்கிய பீஹார் முஸ்லிம்கள்!

சுமார் 20 000 மக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதியுடன் கூடிய உலகின் மிகப் பெரிய இந்து ஆலயத்தின் நிலத்துக்காக இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள முஸ்லிம்கள் குறிப்பிட்டளவு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

Read more...

வாழும் உரிமையை பறிப்பது...?

கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களை நிறைத்திருக்கிறது மயூரனின் படங்களும், ஓவியங்களும், அவனது தண்டனை குறித்த உரையாடல்களும். இது தொடர்பாக Nila Loganathan தனது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ள குறிப்புக்கள் பொருள் பொதிந்தவை. யாவரும் சிந்திக்கத் தக்கவை. அவரது அனுமதியோடு அக் குறிப்பினை  இங்கே பதிவு செய்கின்றோம் . - 4Tamilmedia Team

Read more...

இன்று சர்வதேச பூமி தினம்!:கூகிள் டூடுள் இல் நீங்கள் எந்த விலங்கு எனக் கண்டறியுங்கள்!

இன்று (ஏப்பிரல் 22) சர்வதேச பூமி தினமாகும். 1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிமுகப் படுத்தப் பட்ட இத்தினம் நிகழ்காலத்தில் சுமார் 192 இற்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப் படுகின்றது.

Read more...

More Articles...

comments powered by Disqus