Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

பிரார்த்தனை முடிந்து திரும்புகையில் கால் தடுக்கி விழுந்தார் போப்!:காயமின்றி தப்பித்தார்

இன்று வியாழக்கிழமை போப் பிரான்ஸிஸ் போலந்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கு பற்றி உரையாற்றிய பின்னர் திரும்புகையில் கால் தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். ஆனாலும் அருகில் இருந்த பாதிரியார்கள் துணையுடன் உடனே எழும்பி  நின்ற அவர் காயம் ஏதும் இன்றித் தப்பித்துள்ளார். தமது கண்முன்னே பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Read more...

சிரியாவில் பாதிக்கப் பட்ட அலெப்போ நகருக்கு உதவித் திட்டம் அளிக்க முன்வரும் ரஷ்யா

அண்மையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் சரணடையும் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதாக வாக்களித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிரியாவில் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட வடக்கு அலெப்போ நகரில் மாட்டிக் கொண்டுள்ள பொது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப் பெரியளவில் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் உதவித் திட்டத்தை அளிக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

Read more...

ஹிலாரி கிளிங்டன் அதிபராவதற்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பேச்சு!

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டு வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளிங்டன் அமெரிக்க அதிபராக வருவதற்கு முழுத் தகுதி உடையவரே அதிபர் ஒபாமா ஆதரவளித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பேசிய போதே அதிபர் ஒபாமா இவ்வாறு பேசியுள்ளார். இவர் தனது உரையில் மேலும் தன்னை விடவும், பில் கிளிங்டனை விடவும் ஏனைய வேட்பாளர்களை விடவும் ஹிலாரி அதிபரானால் மிகச் சிறப்பாக சேவை ஆற்றக் கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முறையாகப் பெண் வேட்பாளர் ஒருவர் களம் இறங்கிப் போட்டியிடுவது இதுவே முதன்முறை என்பதுடன் ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற்றால் அமெரிக்க சரித்திரத்தில் முதல் பெண் அதிபராக மாறியும் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னால் அதிபர் பில் கிளிங்டனின் துணைவியாரான ஹிலாரி கிளிங்டன் இதற்கு முன் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராகக் கடமை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் 14 போதை கடத்தல் பேர்வழிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது இந்தோனேசியா

எதிர்வரும் தினங்களில் இந்தேனேசியாவில் போதை மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 14 பேருக்கு நீதி மன்றத்தில் மரண தண்டனை தீர்ப்பு விதித்ததன் மூலம் அதனை உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு.

Read more...

ஜேர்மனி குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு

நேற்று புதன்கிழமை ஜேர்மனியின் நுரெம்பேர்க் பகுதியில் ஷிர்ண்டோர்ஃப் இற்கு அருகே அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே சிறியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஜேர்மனியின் Bayerischer Rundfunk என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

Read more...

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி

நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெழ்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 54 பேர் பலியாகி உள்ளதுடன் ஆயிரக் கணக்கான மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறியும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டும் உள்ளனர்.

Read more...

பிரான்ஸில் பாதிரியாரைக் கொலை செய்தவர்களுக்கு ISIS உடன் தொடர்பு

அண்மைக் காலமாக பிரான்ஸ் ISIS போராளிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றது.

Read more...

சோமாலியாவின் ஐ.நா அலுவலகம் முன் இரு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:13 பேர் பலி

செவ்வாய்க்கிழமை சோமாலியத் தலைநகர் மொகாடிசு இல் அமைந்துள்ள ஐ.நா இன் கண்ணி வெடி அகற்றும் ஏஜன்ஸி மற்றும் இராணுவ சோதனை சாவடி அருகே இரு தற்கொலைக் கார்க் குண்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

Read more...

பங்களாதேஷில் பாரிய தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப் பட்டது! : 9 போராளிகள் கொலை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை போலிசார் கண்டு பிடித்து தாக்குதல் நடத்தியதில் 9 போராளிகள் கொல்லப் பட்டும் ஒருவர் கைது செய்யப் பட்டும் உள்ளனர்.

Read more...

More Articles...

comments powered by Disqus