Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

வியாழக் கிரகத்தில் காணப் படும் பாரிய சிவப்பு சுழல் யாது? : விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும். 1000 பூமி கிரகங்களை உள்ளடக்க கூடிய வியாழனில் 400 mph வேகத்தில் காற்றுக்கள் வீசுவதாகவும் இது சூரியனில் இருந்து பூமியை விட 5 மடங்கு அதிக தொலைவில் உள்ள போதும் பூமியில் நிலவும் வெப்பமே வியாழனிலும் காணப் படுவதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். 

Read more...

துருக்கியில் நடைபெறுவது என்ன? : இராணுவச் சதிப் புரட்சியின் பின்னணியும், காரணிகளும்!

துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன்

நேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.

Read more...

ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி கிருஷ்ணன்

பெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.

Read more...

கம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்!

சமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களைக் கொண்டிருக்கும் கம்போடியாவின் காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்களின் சிதைவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். க்மேர் இராச்சியத்துக்கு சொந்தமானவை எனக் கருதப் படும் இந்த நகரங்கள் லிடார் (Lidar) எனப்படும் வானில் இருந்து எடுக்கப் படும் லேசர் ஸ்கேனிங் தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளன.

Read more...

சூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா?

எமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9  கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

புதனுக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth என்ற கிரகம் இருந்து அழிந்து போனதா?

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு கால கட்டத்தில் எமது சூரிய குடும்பத்தில் இப்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth (சூப்பர் பூமி) எனப்படும் நாம் வாழும் பூமியை ஒத்த குறைந்தது ஒரு கிரகமாவது இருந்ததாகவும் வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Read more...

75 மில்லியன் மைல்களுக்கு அப்பால் நாசாவின் கெப்ளர் தொலைக்காட்டி செயற்பாட்டில் சிக்கல்!

விண்வெளி ஆய்வில் முக்கிய பங்கு வகித்து வந்த நாசாவின் கெப்ளர் செய்மதி தொலைக்காட்டி சமீபத்தில் 75 மில்லியன் மைல்களுக்கு அப்பால் அவசர நிலையை அடைந்துள்ளமை அதன் இயக்கத்தை செயற்படுத்தும் தொழிநுட்பவியலாளர்களைத் தினறடித்து வருகின்றது.

Read more...

இன்றும் நாளையும் பூமிக்கு அருகே கடந்து செல்கின்றது பச்சை நிற வால்வெள்ளி!

இந்த வாரம் பூமிக்கு அருகே அதன் வடக்கு வான்பரப்பில் லினெயார் (Comet Linear) எனப்படும் மிகப் பிரகாசமான பச்சை நிற வால்வெள்ளி ஒன்று கடந்து செல்கின்றது. செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய்க் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தின் ஒழுக்கின் நேரே இது வருகின்றது. தற்போது பூமியின் தென் வான்பரப்பில் வாழ்பவர்கள் தனுசு மற்றும் ஸ்கோர்ப்பியன்ஸ் நட்சத்திரத் தொகுதிகளுக்கு இடையே லினெயார் வால்வெள்ளி நகர்வதை மக்கள் காண முடியும் எனவும் அறிவிக்கப் படுகின்றது.

Read more...

வசந்த காலத் தொடக்கமான இன்று ஞாயிறு சர்வதேச மகிழ்ச்சி தினம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 முதல் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது.

Read more...

More Articles...

comments powered by Disqus