Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஒரு மகிழ்ச்சிக்காரனும் - ஒரு கலகக்காரனும்

ரஜினி தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்து நடித்திருக்கும் படம் கபாலி.   இயக்குனர் இரஞ்சித்திற்கு  இது மூன்றாவது படம் ஆனால் ரஜினிக்கோ   நூறுகளை தாண்டிய  (156) படம். கபாலி என்கிற ரஜினியிடம் இயக்குனர் அதிகம் வேலை வாங்கியிருக்கலாம்.  இரஞ்சித் பிறக்கும் முன் நடிகனாக மிளிர்ந்த ரஜினியை, அதன்பிறகு சமகால நடிகனாக முடியுமென நம்பிக்கை கொள்ளும் வகையில், நடிக்கவைத்து நிருபித்திருக்கிறார். அதை ரஜினியும் ரசிக்கிறார். கொண்டாடி மகிழ்கிறார்.

Read more...

புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்!

சமூகமொன்றின் நிலைத்திருத்தலுக்கான ஒழுங்கு அக-புறக் காரணிகளினால் மாற்றமடையும் போது, அந்தச் சமூகம் வேர்விட்டிருந்த நிலத்தின் சிதைவு ஆரம்பிக்கின்றது. வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் வேர்கள் அறுந்த/ அறுக்கப்பட்ட நிலங்கள் ஏராளம் உண்டு. அல்லது அந்த நிலங்களின் இயல்பு வலிந்து மாற்றப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்குள் தள்ளப்படும் தொடர் காட்சிகளும் உண்டு. 

Read more...

கை வீசும் காற்றாய்...


அந்தப் பாடலைக் கேட்கும் போதினிலெல்லாம் இது விதித்துக் கொண்ட விதியா..? அல்லது எழுதப்படாத விதியா..? என்ற கேள்வி எழுந்து மடியும்.

Read more...

வாசிப்பில் அவர் வாழ்வார்

செங்கை ஆழியானிடம் சிறிது காலம் பாடம் படித்திருக்கிறேன். ஆனால் அவர்  என் மனதில் ஆசிரியனாக ஆழப் பதிந்ததை விடவும்,  எழுத்தாளனாகவே இன்றளவும் வாழ்கின்றார்.  இனிமேலும்...

Read more...

நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் - ஆதிரை

 

அதிகாலை 3.45.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து,  சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன்.  காணவில்லை...

Read more...

ஒருங்கிணைப்பு (integration )

ஒருங்கிணைப்பு (integration ) ;  உலகமயமாக்கலின் செயற்பாடுகள் இயல்பூக்கம் பெற்றிருக்கும் சமகாலத்தில், மேற்குல நாடுகளின் ராஜரீகச் செயற்பாடுகளிலும், பேச்சுக்களிலும், முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு சொல்லாடலிது. 

Read more...

அல்ப்ஸைக் குடைந்து...

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை, சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் ட்ரான்ஸ் போக்குவரத்துப் பாதையில் அமையும் 57 கீலோ மீற்றர்கள் நீளமான சென் கொத்தார்டோ ( San Gottardo ) சுரங்கத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

Read more...

பிரேமம்: காதலை காதலோடு பேசுதல்!

காதலை காதலோடு பேசும் படங்களின் வெற்றியை இரு தரப்பு ரசிகர்கள் பெரும்பாலும் தீர்மானிக்கின்றார்கள். முதலாவது தரப்பு, எப்போதுமே காதல் வரம் பெற்றவர்களாக காதலோடு வலம் வருகின்றவர்கள். அவர்களின் கடந்தகால- நிகழ்கால காதல்களை நினைவூட்டி சிலிர்ப்பான மனநிலைக்குள் தள்ளுவதனூடு அவர்களை படத்தினைக் கொண்டாட வைக்க முடியும். 

Read more...

நுகர்வோரே விழியுங்கள்: உணவகத்தின் உணவுகள் தரமானதா?

சென்னை முழுக்கப் புகழ்ப்பெற்றுத் திகழும் ஒரு உணவகத்தில் சட்னியில் பூராண் கிடந்துள்ளது.

Read more...

More Articles...

comments powered by Disqus