Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகள்! (நிலாந்தன்)

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009இற்குப் பின் அப்பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது.

Read more...

மஹிந்த எனும் சவால்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘அரசியல் மீளெழுச்சி’ பொதுத் தேர்தலினூடு நிகழ்த்தப்பட்டுவிடும் என்று பௌத்த சிங்கள கடும்போக்கு தளமும், சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையின் அளவை பெருமளவாக அதிகரிப்பதினூடு பிரதமர் கனவை அடைந்துவிடலாம் என்கிற எண்ணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது தரப்பினருக்கும் இருக்கின்றது. அதுதான், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை விடாப்பிடியாக முன்னெடுக்கவும் வைத்திருக்கின்றது. 

Read more...

விக்கி - மாவை மோதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியலின் வாக்குப் பெறுமதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுவே, பெருமளவான விமர்சனங்கள் மற்றும் அதிருப்திகளுக்கு அப்பால் நின்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தேர்தல்களில் ஆதரிப்பதற்கு காரணமாக அமைகின்றது.

Read more...

இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. 

Read more...

யாழ் நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 34 வருடங்கள்..!

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…! 

Read more...

ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்! (அமல்ராஜ் பிரான்ஷிஸ்)

‘ரோஹிங்யா’ இன்றெல்லாம் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நாம் கடந்துவரவேண்டிய ஒரு சொல். ஜீரணிக்கமுடியாத கொடூர புகைப்படங்களோடு பகிரப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் இரத்தத்தால் நிரப்பியிருக்கிறது. இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி சரியான தெளிவின்மையும் அறியாமையும் இன்னும் இன்னும் இந்த தீவிர சமூகவலைத்தள பகிர்வுகளுக்கும் இனத்துவேச வார்த்தைகளுக்கும் வழிகோலுகின்றன. இதைப்பற்றி கொஞ்சம் அலசவேண்டும் என காத்திருந்த எனக்கு இன்று நேரம் வழிவிட்டுக்கொடுத்திருக்கிறது. 

Read more...

சகோதரி மன்னம்பேரி முதல் வித்தியா வரை...?!

அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

Read more...

இலங்கை : யுத்தத்தின் விதவைகள் : வீடியோ பதிவு

கட்டுக் கட்டாக இராணுவ ஆட்டிலெரிகள் வீழ்ந்து வெடித்ததில், தனது மகனையும், கணவனையும் இழந்து விதவையானவர் சிவலிங்கம் மகேஸ்வரி. இறுதி யுத்த ஷெல் தாக்குதலில் தனது ஒரு கையையும் இழந்துவிட்டார். இலங்கையில் ஆயுத மோதல்களில் விதவையான 90,000 பேர் தமது வாழ்வாதாரத்திற்கும், தமது பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவு தேடவே கடும் பாடுபட்டு வருகின்றனர்.

Read more...

‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு! (சீ.வீ.கே.சிவஞானம்)

தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 

Read more...

More Articles...

comments powered by Disqus