Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்! (இலைஜா ஹூல்)

பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் 

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

Read more...

நிஷாவின் வருகை… தேய்ந்து மறைந்த சர்வதேச விசாரணை! (புருஜோத்தமன் தங்கமயில்)

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை (ஒகஸ்ட் 26, 2015) கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் பின் வெளியிடப்பட்ட படத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நிஷா தேசாய் பிஸ்வால் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினரும் பெரும் புன்னகையோடு காட்சியளித்தனர். குறித்த படம் தமிழ் ஊடக மற்றும் சமூக சூழலில் பெரும் சினத்தோடு எதிர்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் பத்தியாளரும் அப்படியொரு மனநிலையை வெளிப்படுத்தினார். 

Read more...

தமிழ்த் தேசிய அரசியலின் நீட்சிக்கான கூட்டுப் பொறுப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கசப்பான- கடுமையான ஆறு ஆண்டுகளைக் கடந்து அரசியலுரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கிய பெரும் நகர்வை மேற்கொள்ள வேண்டிய இடத்தில் தமிழ் மக்கள் இப்போது வந்து நிற்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்திற்கு ஒத்துழைத்ததன் மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் மீள் நம்பிக்கையொன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் சிறிதாகக் கொள்ள ஆரம்பித்தனர். அந்த நம்பிக்கை, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சி- காட்சி மாற்றங்களோடு சற்று வலுத்திருக்கின்றது. 

Read more...

கூட்டமைப்பின் வெற்றி சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஓரணியில் அணி திரள்வதன் மூலம் பலமான அரசியல் சக்தியாக தம்மை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டினை பொதுத் தேர்தலினூடும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை பருமட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்றி வைப்பதற்கும் அது காரணமாக அமைந்திருக்கின்றது. 

Read more...

சுமந்திரன்- கஜேந்திரகுமார் போட்டி! (புருஜோத்தமன் தங்கமயில்)

“தமிழ் மக்கள் மத்தியில் இந்தப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை முன்னிலைப்படுத்துவதைக் காட்டிலும், எம்.ஏ.சுமந்திரன்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் அதிகமாக முன்னிறுத்தியிருக்கின்றது. அதாவது, கட்சி- கொள்கை அரசியலைத் தாண்டி, ‘சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார்’ எனும் போக்கினைக் காட்டுகின்றது. இப்படியான நிலை ஏன் ஏற்பட்டிருக்கின்றது. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களா?” என்றொரு கேள்வியை கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 

Read more...

பொதுத் தேர்தல் 2015: வெற்றி யாருக்கு? (ஆசனங்களின் பங்கீடு - ஒரு ஒப்புநோக்கு)

இலங்கையினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்யப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் வரும் திங்கட் கிழமை (ஒகஸ்ட் 17) நடைபெறவிருக்கின்றது. தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்துக்கான போட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியும் (ஐ.தே.க), முன்னாள் ஜனாதிபதியை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பெரும் போட்டி போடுகின்றன.

Read more...

ஏக பிரதிநிதித்துவத்துக்கான போர்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியலும்- ஆயுதப் போராட்டமும் ‘ஏக பிரதிநிதிகள்’ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன. பல் கட்சி- அமைப்பு அரசியலின் மீது அதீதமாக நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புக்களை பெருமளவில் தவிர்த்து வந்திருக்கிற தமிழ்த் தேசிய அரசியற்சூழல், தன்னுடைய பொது எதிரியாக பௌத்த சிங்கள பேரினவாதத்தை கருதி வந்திருக்கின்றது. அதனையே, பின் வந்த ஆயுதப் போராட்டமும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. 

Read more...

ஜனநாயகப் போராளிகளின் வருகை! (புருஜோத்தமன் தங்கமயில்)

சமூகமொன்றின் விடுதலைக்காக போராடியவர்கள் காட்சி மாற்றங்களில் போக்கில் ‘முன்னாள் போராளிகள்’ ஆனதும், அவர்களை அதே சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்கிற நிலைப்பாட்டில் கையாள்வது உலகம் பூராவும் தொடரும் வழக்கம். இதற்கு தமிழ்ச் சூழலும் விதிவிலக்கானது அல்ல. இயல்பு வாழ்க்கைக்கு முன்னாள் போராளிகளுடனான ஊடாடல்கள் சிக்கல்களை உருவாக்கும் என்கிற தன்மையை முன்னிறுத்திக் கொண்டு ‘விலக்கி வைத்தல்’ என்கிற நிலைப்பாட்டின் பக்கம் மக்கள் அதிகமாக நகர்ந்து விடுகின்றார்கள். இதுதான், தமிழ் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கும் கடந்த காலங்களில் நடந்தது. 

Read more...

த.தே.ம.மு.வின் எதிர்க்கடை அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலை முன்னிறுத்திய காட்சி மாற்றங்கள் மற்றும் பரபரப்புக்களினால் தென்னிலங்கை பௌத்த சிங்கள அரசியலரங்கு சூழப்பட்டிருக்கின்றது. அந்த பரபரப்புக்களை பெரிதாக உள்வாங்காமல் வடக்கு- கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலரங்கு சற்று புதிதான நகர்வினைக் காட்டுகின்றது. அல்லது, அப்படியொரு காட்சியினை வடிவமைக்க முயல்கின்றது. 

Read more...

More Articles...

comments powered by Disqus