Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கி CERN இன் பவர் கேபிளை மரநாய் கடித்தது!:செயற்பாடு இடைநிறுத்தம்

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய பூமியில் மனிதன் மிகப் பெரும் பொருட் செலவில் அமைத்த ஆய்வு கூடமே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு அண்மையில் அமைக்கப் பட்ட CERN என்ற துகள் முடுக்கி (atom smasher) ஆகும். LHC (Large Hadron Collider) என அழைக்கப் படும் இந்த எந்திரம் 2009 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு பறவை எலெக்ட்ரிக்கல் யூனிட்டில் வைரம் போன்ற கடினமான கல்லை வீழ்த்திச் சென்றதால் அதிகம் சூடாகி பழுதடைந்து இருந்தது. இதைச் சரி செய்வதற்கே ஒரு வருடமும் மில்லியன் டாலர்கள் பொருட் செலவும் ஏற்பட்டு இருந்தது. 

 

சுமார் $7 பில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப் பட்ட LHC மறுபடி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அதாவது மரநாய்க்கு (Weasel) ஒப்பான பிராணி ஒன்று LHC இன் பவர் கேபிளைக் கடித்து துண்டு துண்டாக்கி உள்ளது. இதனால் LHC மறுபடியும் மூடப்பட்டுள்ளது. (Shut down) ஓளியின் வேகத்துக்கு இணையான வேகத்தில் பரவும் கதிர்களை மோதவிட்டு ஆய்வு நடத்தி அறிவியலின் மிக அடிப்படையான விதிகளைக் கண்டு பிடிக்க மிகவும் சிக்கலான முறையில் இயங்கி வரும் LHC துகள் முடுக்கிக்கு ஏற்பட்டுள்ள சோதனைகள் இன்னமும் முடிந்த பாடில்லை. 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பு (Big bang) மூலம் பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வருவதாக இன்றைய விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஒத்துக் கொண்ட கருதுகோளை ஆபத்தில்லாத பரிசோதனை அடிப்படையில் LHC இற்குள் ஏற்படுத்தி அவதான அடிப்படையிலான விளக்கங்களைப் பெறுவதற்கே LHC இயக்கப் பட்டு வருகின்றது.

பிரபஞ்சத்துக்கு நிறையை வழங்கி வரும் ஹிக்ஸ் போசொன் (Higgs Boson) என்ற துகளை 2012 ஆம் ஆண்டுக்கு முன்னரே கண்டு பிடித்து விடுவோம் என சேர்ன் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். எனினும் பழுது பார்க்கும் பணிகளுக்கு மத்தியிலும் இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. மே மத்தியில் சேர்ன் பழுது பார்க்கும் பணி நிறைவுற்று ஆய்வுகள் தொடரும் என LHC இன் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:தகவல் Mail Online

மேலதிக விபரங்களுக்கு

4தமிழ்மீடியாவுக்காக நவன்

comments powered by Disqus