Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

'கேஸ்பர்' (Casper) என அழைக்கப் படும் இந்த ஆக்டோபொட் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கேஸ்பர் (Casper) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உலகில் பிரசித்தமான சிறுவர்களுக்கான கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரம் பற்றி சிலவேளை அறிந்திருப்பீர்கள்.

தற்போது ஹவாய் தீவுக்கு வடமேற்கே நெக்கெர் தீவுக்கு அண்மையில் கடலில் தானியங்கி கமெரா மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்ட போது 14 000 அடி ஆழத்தில் இனம் காணப்பட்ட ஆக்டோபொட் ஒன்றுக்கும் கேஸ்பர் என்ற செல்லப் பெயரிட்டுள்ளனர் சமுத்திரவியலாளர்கள்.

Friendly ghost எனும்  உதவும் குணம் கொண்ட, அச்சுறுத்தல் இல்லாத ஒரு ஆவியே கேஸ்பர் கார்ட்டூன் கதாபாத்திரம் ஆகும். குறித்த ஆக்டோபொட்டும் வெள்ளை நிற உடலும் இரு கருப்புக் கண்களுக்கும் கொண்டுள்ளது. இதேவேளை ஒக்டோபொடா குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோபஸ் மற்றும் ஒக்டோபட் ஆகிய இரு இனங்களும் வெவ்வேறானவை. கேஸ்பர் போல் தென்படுவது ஒக்டோபட் என்பது நினைவில் கொள்க.

கேஸ்பர் ஒக்டொபட்டுக்கள் கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் வசிக்கும் தனித்துவமான உயிரினம் என்கின்றனர் சமுத்திரவியல் உயிரியல் ஆய்வாளர்கள். NOAA எனப்படும் அமெரிக்காவின் தேசிய சமுத்திரவியல் சுற்றுச் சூழலியல் அமைப்பின் மூலம் ஹவாய் தீவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்ட போதே இந்த கேஸ்பர் ஆக்டோபொட் இனம் காணப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு : http://edition.cnn.com/2016/03/05/us/ghost-octopod-casper/index.html

comments powered by Disqus