Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

உலகின் மிக நீண்ட வான் பயனத்தை நிறைவு செய்தது எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் விமானம்!

17 மணித்தியாலங்கள், 15 நிமிடங்கள் நேரத்தில் சுமார் 14 000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக எங்கும் நிறுத்தாது வானில் பயணித்து உலகில் மிக நீண்ட தூர நொன்ஸ்டாப் பயணத்தை நிகழ்த்தி எமிரேட்ஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.

புதன்கிழமை டுபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்த போது இச்சாதனையை நிகழ்த்திய எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் 380 ரக விமானமே நடப்பு உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பூமியில் மிக நீண்ட தூர விமானப் பயணங்களின் போது முகப்புப் பக்கம் தாக்கக் கூடிய காற்று (head winds)காரணமாக பயண நேரம் நீடிப்பதால் டிரான்ஸிட் முறை பாவிக்கப் பட்டு சில பயணங்கள் முழு நாளுக்கும் அதிகமாக நீடிப்பதும் உண்டு. இதனால் பயணக் களைப்பும் மன உளைச்சலும் பயணிகளுக்கு ஏற்படுவது வாடிக்கையாகும். இக்குறையைப் போக்குவதற்கே உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் என்பன நவீன மற்றும் அளவில் பெரிய விமானங்களைத் தயாரிப்பதுடன் விமானத்தின் வால் பக்கத்தைத் தாக்கும் காற்றின் பயனை அதிகம் பயன்படுத்தி பயணத்தையும் விரைவாக மாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

comments powered by Disqus