Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

சூரிய குடும்பத்தில் பூமி தவிர்ந்த ஏனைய கிரகங்களிலும் பிரமிடுக்கள்?

சமீபத்தில் நாசாவின் கியூரியோசிட்டி விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த புகைப்படத்திலும், செவ்வாய்க் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள கியூப்பர் பெல்ட் எனப்படும் குறும் கற்கள் தொகுதியில் சூரியனைச் சுற்றி வரும் குள்ளக் கிரகமான செரேஸ் (ceres) இல் நாசாவின் டாவ்ன் விண்கலம் எடுத்த புகைப்படத்திலும் பிரமிடுக்கள் தென்படுவதாக வெளி வந்துள்ள செய்தியே தற்போது விஞ்ஞான உலகில் ஹாட் டாபிக்!

பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செவ்வாய்க் கிரகத்தின் தரையில் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கியூரியோசிட்டி விண்கலம் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி அனுப்பிய புகைப்படத்தில் பாறைகளுக்கிடையே பிரமிடு வடிவம் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு காரின் அளவு இருக்கும் அப்பிரமிடு நிஜமெனில் அதன் மிகப் பெரும் பகுதி தரைக்குக் கீழே இருக்கலாம் என அப்பிரமிடு பண்டைய ஏலியன் குடியேற்றத்தின் ஓர் ஆதாரம் எனக் கருதும் ஒரு சாரார் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் மற்றும் மக்களின் அபிப்பிராயப் படி அந்த அமைப்பு எதேச்சையாக அமைந்த பாறை வடிவமைப்பே என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் ParanormalCrucible என்ற யூடியூப் சேனல் பல படிகள் மேலே போய் குறித்த தோற்றமானது பாறை வடிவமைப்போ அல்லது ஒளி நிழல் விளைவோ அல்ல என்றும் இது நிச்சயம் அறிவார்ந்த மனிதனைப் போன்ற  உயிரினத்தின் மிகத் திருத்தமான கட்டமைப்பே என்றும் பிரச்சாரம் செய்து வருவதுடன் குறித்த யூடியூப் வீடியோ இதுவரை சுமார் 7 இலட்சம் பேரால் பார்வையிடப் பட்டும் உள்ளது.

இதேவேளை ஜூன் 14 ஆம் திகதி நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கியூப்பெர் பெல்ட்டிலுள்ள மிகப் பெரிய குள்ளக் கிரகமான செரெஸ் இனை 2700 மைல் உயரத்தில் இருந்து நாசாவின் டாவ்ன் விண்கலம் புகைப் படம் எடுத்திருந்தது. இந்தப் புகைப் படத்திலும் இரு பிரகாசமான ஒளிப்பொட்டுக்கள் தென்படுகின்றன. மேலும் இவ்விரு ஒளிப் பொட்டுக்களும் செரெஸின் தரை மேற் பரப்பில் சுமார் 3 மைல் உயரத்தில் அமைந்துள்ள இரு பிரமிடுக்களாக இருக்கலாம் எனப் பரவலாக ஊகிக்கப் படுகின்றது. சில விஞ்ஞானிகள் இந்தப் பிரமிடுக்கள் 5 மைல் உயரம் உடையவையாகவும் இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வெகு சமீபத்தில் தான் நாசாவின் பிரதான விஞ்ஞானியான எல்லென் ஸ்டொஃபன் இன்னும் 10 வருடங்களுக்குள் (2025 இற்குள்) எமது பிரபஞ்சத்தில் வேற்றுக் கிரக வாசிகள் அல்லது உயிரினம் தொடர்பான ஆதாரம் நிச்சயம் கிடைக்கும் என்றும் இன்னும் 20 தொடக்கம் 30 வருடங்களுக்கும் மிக உறுதியான ஆதாரம் கிடைக்கும் எனவும் அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus