Tuesday, Dec 07th

Last updateFri, 29 Jul 2016 3pm

உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது

உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலக புற்று நோய் தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று, கணக்கெடுப்பின் முடிவு தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு கணக்கெடுப்பு முடிவின் படி புற்று நோயால் பதிக்கப்பட்ட பெண்கள்,5 லட்சத்து 37 ஆயிரம் என்றும், மாறாக ஆண்கள் எண்ணிக்கை என்று பார்க்கும்போது அது 4 லட்சத்து 77 ஆயிரம் பேர் என்றும் தெரிய வருகிறது.

தற்போதைய நிலவரப்படி வருடா வருடம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் சதவிகிதம் எனும்போது அது 62 லிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்து உள்ளதாகவும்,புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள் சதவிகிதம் 32லிருந்து 36 சதவிகிதம் என்று மட்டுமே உயர்ந்து வருவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் ஆகியவற்றின் தாக்கம் அதிகம் இருப்பதாலேயே, புற்று நோயால் பாதிக்கப்படுவதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் அனுஷ்டிக்கப்படும் இந்த நாளில் அனைவரும் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பது இந்த நாள் நமக்கு அறிவுறுத்தும் உண்மை.

comments powered by Disqus