Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த சினிமா தொடர் பதிவுகள்!

2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் தொடரின்  இணைப்புக்கள் இவை. தென்னிந்திய சினிமா துறையில் இளைய தலைமுறையினர் பலரின் எதிர்காலக் கனவு அல்லது இலக்கு கோடம்பாக்கம். வண்ணமயமான, இக் கனவுப்பட்டறையின் கதவுகள் இலகுவில் எவர்க்கும் திறந்து விடுவதில்லை. அதன் வாசல் திறப்பதற்கு முன் வரம் வேண்டித் தவம் கிடக்கும் இளையவர்கள் குறித்த புதிய கட்டுரைத் தொடர் " கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ". சினிமாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அத்துறை எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து அறிய ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய தொடர்.

4தமிழ்மீடியாவின் சினிமாச் செய்தியாளர் மற்றும் விமர்சகர், newtamilcinema.com ஆசிரியர், சினிமாத்துறை மக்கள் தொடர்பாளர், எனப் பல பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும், அழகியலான எழுத்துக்குச் சொந்தக்காரராகிய ஆர்.எஸ்.அந்தணன் இத் தொடரினை எழுதியிருந்தார். அவற்றின் இணைப்புக்கள் :

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 01

அவரு யாருகிட்டயும் வொர்க் பண்ணல… நேரடியா டைரக்டர் ஆகிட்டாரு தெரியுமா?’ இப்படி பலரையும் வியப்படைய வைத்த டைரக்டர்களான மணிரத்னம், டி.ராஜேந்தர் லிஸ்ட்டில் மற்றும் பலர் இணைவதென்பது நடக்கவே நடக்காத காரியமா?..

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 02

« வாய்ப்பினை வெற்றியாக்கித் தருபவர்கள், உதவி இயக்குனர்கள் என்கிற அற்புதமான உழைப்பாளிகள். அவர்கள் இராப் பகல் தெரியாத தேனீக்கள் »

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 03

« ஒரு நல்ல உதவி இயக்குனரின் அடையாளம் என்ன? படப்பிடிப்பில் யாருடைய பெயரை ஒரு இயக்குனர் பலமுறை உச்சரிக்கிறாரோ, அவர்தான் சிறந்த உதவி இயக்குனர். »

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 04

ஒரு படம் பிள்ளையார் சுழி போடப்படுவதிலிருந்து, திரைக்கு வருவது வரைக்கும் அந்த களத்தில் நடக்கும் அத்தனை கத்தி சண்டைகளையும், கலகலப்பு தோரணங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் உதவி இயக்குனர்தான்…

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05

ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள்.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06

என்னுடைய நண்பர் ஒருவர், தனது நெருங்கிய உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இவனுக்கு சினிமான்னா உசுரு. யார்ட்டயாவது அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்றார். பையன் பார்க்கதான் ஸ்மார்ட். மண்டையில் ஒன்றும் இல்லை என்று சில வார்த்தைகள் பேசும்போதே புரிந்து போனது. இருந்தாலும், சொன்னவர் முக்கியமானவர் என்பதால், ‘முயற்சி பண்றேன். முழுசா உத்தரவாதம் இல்ல’ என்று கூறி, என் இயக்குனர் நண்பர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன்.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07

“நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு ‘அந்நியன்’ படத்தின் இணை இயக்குனராக பணியாற்றினார் செந்தமிழன்.

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள்

குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன், விக்ரமனிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரிடமிருந்து சேரன்.

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 09

திரைக்கதையின் போக்கில் அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதையெல்லாம் எந்நேரமும் அசை போட்டுக் கொண்டேயிருக்க வேண்டிய நபர் இவர்தான்.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 10

காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4 : கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக் கொள்வோம்.

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12

படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி. இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்… ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 13

மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா?…

Read more..

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14

பல வருடங்களுக்கு முன் நான் ஒரு வார பத்திரிகையில் பணியாற்றி வந்தேன். அப்போது பக்கம் முடிக்கிற நாட்களில் வேலை நள்ளிரவு வரை நீடிக்கும். பத்து பேராக சேர்ந்து சாப்பிட போனால் என்னாவது? கையேந்தி பவன்கள்தான் எங்கள் ஆசிரியர் குழு மொத்தத்திற்கும் பிளேட் கொடுக்கும்.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15

நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16

நடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர்.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 17

ரோப் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால், நாம் வியக்கிற அத்தனை ஹீரோக்களும் சுத்த டம்மி பீஸ்கள்தான். அந்தரத்தில் பறந்து அடிக்கிறார்கள் அல்லவா? அதற்கு இந்த ரோப்தான் பயன்படும். நன்றாக வளைந்து கொடுக்கக்கூடிய மெல்லிய கம்பிதான் அது.

Read more…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 18

சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

Read more…

2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த பயனுறு இணைப்புக்கள் 

 

2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த யூடியூப் கோர்னர் பதிவுகள்!

2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த வருங்கால தொழில்நுட்ப பதிவுகள்! 

2014 இல் 4தமிழ்மீடியா : ஜீ.உமாஜியின் பதிவுகள்!

 4தமிழ்மீடியாவின் சமூக வலை இணைப்புக்களுடந் தொடர்ந்து இணைந்திருங்கள் : 

comments powered by Disqus